யாழில் துப்பாக்கி முனையில் மிரட்டிய அர்ச்சுனா எம்.பி ; மிரட்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு பிறப்பிக்கபட்ட உத்தரவு
அர்ச்சுனா எம்.பியால் மிரட்டலுக்கு உள்ளான பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்கவும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் பெரியளான் பகுதியில் உள்ள காணியை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுத்தம் செய்ய முற்பட்டுள்ளார்.

காணி எல்லை பிரச்சினை
இந்நிலையில் அந்த பகுதியில் தமது காணியும் இருப்பதாக தெரிவித்து சிலர் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர். குறித்த காணி எல்லை பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணின் உறவினரான இளைஞர் ஒருவரும் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் அர்ச்சுனா எம்.பி. அந்த இளைஞனை தாக்கியதாக அந்த இளைஞரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி உன்னை கொலை செய்வேன் என அந்த பெண்ணுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பின் முக்கிய பகுதியில் இளைஞன் செய்து வந்த மோசமான செயற்பாடு ; வீட்டுக் கூரையில் சிக்கிய ஆதாரம்
இதன்போது சட்டத்தரணி கௌசல்யாவும் அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை காணொளியும் பதிவு செய்துள்ளார்.
பின்னர் அர்ச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை இன்று முற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் பகிரங்க கொலை மிரட்டல் மற்றும் இளைஞரை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.