எம்.பி அலி சப்ரி காரில் மோதி பாதசாரி ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் (Ali Sabri Raheem) மோட்டார் காரில் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (04-05-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலாவி - கல்பிட்டி வீதியில் மாம்புரி என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி இருந்ததாக நொரோச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய புத்தளம், மந்திவு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக எம்பியின் காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.