மலைக்கவைத்த திருமண பரிசுகள்; முன்னாள் காதலர்கள் அன்பளிப்பு!
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது காதலரான நடிகர் விக்கி கௌஷலை கடந்த 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிகை கத்ரீனாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை கத்ரீனாவின் முன்னாள் காதலரான நடிகர் சல்மான் கான் ரூ. 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக அளித்திருக்கிறாராம்.

மேலும் கத்ரீனாவின் மற்றொரு முன்னாள் காதலரான நடிகர் ரன்பிர் கபூரோ ரூ. 2.7 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை அவருக்கு கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ரன்பிர் கபூரின் காதலியான நடிகை ஆலியா பட் கத்ரீனாவின் திருமணத்தில் கலந்து கொண்டு சில லட்சங்கள் மதிப்புள்ள பரிசை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவோ, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வைர காதணிகளை கொடுத்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானோ, ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார். மணமகன் விக்கி கௌஷலுக்கு பி.எம்.டபுள்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார் நடிகர் ரித்திக் ரோஷன், இப்படியான தகவல்களை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த நட்சத்திர தம்பதிகளின் திருமண பரிசு விவரங்கள் அனைவரையும் மலைக்க வைக்கும் அளவுக்கு பல கோடிக்கு குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.