சிறை அதிகாரி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகத்திலிருந்து அச்சுறுத்தல்கள்
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியான சிறிதத் தம்மிக்க நேற்றைய தினம் (13) துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிஸ்டல் வகையைச் சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிதத் தம்மிக்க, கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அதிகாரியாக சில காலம் பணியாற்றியிருந்தார்.
அங்கு பணியாற்றிய காலத்தில் அவருக்கு பாதாள உலகத்திலிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த படுகொலை தொடர்பாக, அக்மீமன பொலிஸார் உள்ளிட்ட நான்கு பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.