அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய பங்களதேஷ் இளைஞன்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தீர்வையின்றி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணை
சந்தேகநபரிடமிருந்து தீர்வையின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10,200 சிகரெட்டுகள் (51 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பங்களதேச நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.