எரிபொருள் வாங்க வாகனத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள்!
நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் , பெற்றோலினை பெற்றுக்கொள்ள சில பிரதேசங்கள் பத்து கிலோமீற்றருக்கும் தூரமாக காணப்படுவதால், வாகனம் ஒன்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்து பெற்றோல் அடித்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று, முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு, கிராம அலுவலகரின் பதிவின் கீழ் டோக்கன் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றுபவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுன் எரிபொருள் வழங்கப்பபட்டு வருகின்றது.