மோட்டார் சைக்கிள் திருடர்கள் அகப்பட்டனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள், மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்த மற்றொரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை, எல்தெனியா பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபர்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டதுடன், அங்கிருந்து 14 கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வழக்கின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மற்றொருவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.