யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு
ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
அத் திருமண மண்டபத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (10) நிறுத்தி வைத்துவிட்டு திருமணத்திற்கு சென்று திரும்பி வந்த பார்த்த போதே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
முற்பகல் 10.30 தொடக்கம் 12.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
இத்திருட்டு தொடர்பாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரம் அறிந்தவர்கள் உரிமையாளரான சு.பாலசுப்பிரமணியம் 0777655527 என்பவரது இலக்கத்திற்கோ அல்லது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும்.
அண்மைக்காலங்களில் யாழ்குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.