போதைப்பொருளுடன் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் ; சினிமா பாணியில் சுட்டுபிடித்த பொலிஸார்
கொழும்பு, பொரள்ளை, சஹஸ்புர பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள்
இதன்போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பின்புறத்தில் பயணித்தவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற நபர் வேயாங்கொடையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் செலுத்துனரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் மாளிகாகந்தை நீதவான் நிதிமன்றில் இன்று சனிக்கிழமை (3) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.