இரண்டு பேருந்துகளுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
இரண்டு பேருந்துகளுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் பொலன்னறுவ - புலஸ்திகம தம்பால - 400 மார்க்கத்தில் கெவலஹட்ட பிரதேசத்தில் நேற்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியின் வளைவான பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஒன்றில் மோதி விலகிச் சென்று மற்றுமொரு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஓட்டுனர் துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியான இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வேகமாகப் பயணித்த மோட்டார்சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துகளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.