அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நடந்த சம்பவம் ; 600 இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த அவலம்
செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல், பெரும் தீ விபத்தால் தற்காலிகமாக துறைமுகத்துக்கு திரும்பியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தி வரும் நிலையில், யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். போர்டு கப்பல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே 266 நாட்களாக கடலில் உள்ளது.

பழுதுபார்க்கும் பணி
இந்நிலையில், கடந்த 12ம் திகதி கப்பலின் துணி துவைக்கும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீயை அணைக்க கடற்படையினர் 30 மணி நேரத்துக்கும் மேலாக போராடினர்.
இந்த தீ விபத்தில் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள், படுக்கை அறைகளை இழந்து, தரையிலும் மேசைகளிலும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், 200 பேர் புகையை சுவாசித்ததால் சிகிச்சை பெற்றதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பு ; ஈரானின் எச்சரிக்கையால் காத்திருக்கும் ஆபத்து
ஈரான் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், கப்பலின் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஈரான் போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்த அதிநவீன அணு மின்சக்தி கப்பல், கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் உள்ள சவுடா பே துறைமுகத்துக்கு பழுதுபார்க்கும் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது.