தம்பதியர் பயணித்த மோட்டார் சைக்கிள் ; தீ விபத்தில் நாசம்
தம்புள்ளை - கண்டலமை வீதியின் சிசிரவத்த சந்தியில், தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டலமை பகுதியில் வசிக்கும் தம்பதியினர், தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக ஒரு மூட்டை கொப்பரையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தீ
திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியதைக் கண்ட இருவரும், உடனடியாக அதிலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.
அவர்கள் இறங்கிய அடுத்த கணமே தீ வேகமாக பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீதியில் எரிந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயைக் கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் முயற்சி எடுத்து தீயை அணைத்துள்ளனர்.