மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை!
2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை
குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும். அதேவேளை இலங்கையில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.