கோப் குழுவின் தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஐக்கிய மக்கள் சக்தி கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஆசிய கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜே.ஷாவுடன் பரிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ள 13 கடிதங்கள் பற்றிய தகவல் கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் (22.07.2022) ஆம் திகதி முதல் கடந்த (05.11.2023) ஆம் திகதி வரை விநியோக்கிக்கப்பட்டுள்ள கடிதங்கள் அதில் அடங்கியுள்ளன.