மூன்று பிள்ளைகளின் தாயார் கொடூரமாக கொலை; நடந்தது என்ன?
அநுராதபுரம் - ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், அநுராதபுரம் அங்கமுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. கொலை குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவருடன் குடும்ப தகராறு
உயிரிழந்த பெண் தனது கணவருடனான குடும்ப தகராறு காரணமாக சுமார் 8 மாதங்களாக தனது தாயார் வீட்டில் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் கணவர் தனது இளைய மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், கணவர் மூத்த மகனை ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தாயார் வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபரொருவரினால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்டன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        