18 வயது மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு திருமணம் ; தாயின் செயலால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்
மகளை கடத்திச்சென்று கள்ளக்காதலனுக்கு தாயே திருமணம் செய்துவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவருக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளார். 18 வயது இளைய மகள் மட்டும் சித்ராவுடன் உள்ளார்.

தகாத உறவு
சித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்த தாய் சித்ரா மற்றும் தங்கை மாயமானதாக மூத்த மகள் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பொலிஸாரின் தீவிர விசாரணையில் கேரள மாநிலத்தில் அவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்போது கேரளாவில் பதுங்கியிருந்த தாய், கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்து இளம்பெண்ணை மீட்டுள்ளனர்.
குறித்த இளம் பெண்ணிடம் விசாரனை நடத்திய போது, அதில், தன்னை வாயில் துணியை வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்தியதாகவும், பின்னர் அங்கு சென்று தனக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு தாய் சித்ராவும் உடந்தையாக இருப்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சித்ரா, கந்தன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட இளம்பெண்ணை அவரது சகோதரியிடம் ஒப்படைத்தனர். கள்ளக்காதலனுக்கு மகளை கடத்தி தாயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.