தலைமறைவான பொலிஸ் அதிகாரியின் தாய் - மச்சானுக்கு நேர்ந்த கதி!
பிரபல குற்றவாளி ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் அதிகாரியின் தாயாரையும், மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியின் கார் மாத்தறை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் பொலிஸ் அதிகாரியின் சகோதரியின் கணவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்காக இவர்கள் உதவியுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.