பேருந்து நிலையத்தில் 2 வயது மகனை தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த தாய்
இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனைப் பேருந்து நிலையத்தில் தனியாகத் தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் உந்துருளியில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது 2 வயது மகனைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார்.
பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஓட்டமெடுத்த தாய்
தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குறித்த பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.