மகன் செலுத்திய காரில் சிக்கி உயிரிழந்த தாய்
கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கார் திடீரென நின்றுள்ளது. இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்.
விபத்து சம்பவம்
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணும் அவரது மருமகளும் காரை இயக்குவதற்காக முன் சக்கரத்திலிருந்து கல்லை அகற்றியுள்ளனர். இருப்பினும், கார் சரிவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.

இதன்போது, இறந்த பெண் காரின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கார் முன்னோக்கி வந்த போது மருமகள் உடனடியாக விலகிய போதும், உயிரிழந்த பெண்ணால் விலக முடியாததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        