இம்மாத இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம் ; இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கிறது
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்த்து யோகங்களையும் உருவாக்கும். அந்த வகையில் நவம்பர் 30 ஆம் திகதி ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது.
ஏனெனில் இந்நாளில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அப்படி நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் குரு, செவ்வாய் மற்றும் கேதுவுடன் சேர்ந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளார்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மேஷம்: மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும். இருந்தாலும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்த்து, நன்கு யோசித்து முடிவெடுத்தால், மோசமான விளைவுகள் அல்லது இழப்புக்களைத் தவிர்க்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
யாழில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி ; விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சம்பவம்
சிம்மம்: சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். சில முக்கியமான பணிகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரலாம். மொத்தத்தில் வாழ்க்கை செழிப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
தனுசு: தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வநத வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.