இதுவரை 59.05 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா எனும் கொடிய அரக்கன்!
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் கொடிய தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டது.
கடந்த இருவருடங்களாக உலகை ஆட்டிப்படைக்கும் இந்த கொடிய வைரசால் மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துவரும் அதேவேளை நாடுகளைன் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,923,828 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 427,943,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 355,771,353 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 80,555 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 80,255,849 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54,494 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
963,494 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1416 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 52,084,416 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேபோல இந்தியாவில் 42,865,431 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 13,502 பேர் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை 512,141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 206 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸின் தாக்கத்தையும், பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.
அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்ததாக, தொற்று அதிகம் பாதித்ததில் பிரேசில் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை அங்கு 28,351,876 பேர் தொற்றுக்கு பாதிப்படைந்துள்ளனர்.
101,285 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரேசிலில் இதுவரை 645,534 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளதுடன் 839 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று முற்றுமுழுவதுமாக நீங்காவிட்டாலும் படிப்படியாக தற்பொது குறைந்துவரும் நிலையில் உலகநாடுகள் பல்லவும் கட்டுப்பாடுகளை தளர்த்திவருகின்றமையானது மக்களிடையே அசற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.