மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் பயிற்சி ; இந்திய இராணுவத்தினர் இலங்கை வருகை
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான 12ஆவது கட்ட ‘மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக 19 அதிகாரிகள் உள்ளிட்ட 150 இந்திய இராணுவத்தினர் இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
இந்தக் கூட்டுப் பயிற்சி நவம்பர் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மாதுருஓய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 17 அதிகாரிகள் மற்றும் 153 படையினர் பங்கேற்கவுள்ளதுடன், இலங்கை விமானப்படையும் பயிற்சிக்கு பங்களிப்பு வழங்கவுள்ளது.
பயிற்சிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 650க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையிலான நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக, வான்வழி ஆதரவுடன் படையணி மட்டத்திலான கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.