மித்தெனிய துப்பாக்கிச் சூடு - 9 வயது மகனும் பலி
மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
வீரகெட்டிய-மித்தெனிய வீதியில் உள்ள கல்பொத்தயாய பகுதியிலுள்ள கடைக்குத் தனது மூன்று பிள்ளைகளுடன் இரவு உணவு வாங்க சென்ற போது அவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுடப்பட்டனர்.
உந்துருளியில் வந்த இருவர், T56 துப்பாக்கியுடன் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதான அருண விதானகமகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது 6 வயது மகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 9 வயது மகனும் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.