வாக்காளர் பட்டியலில் காணாமல் போன சசிகலா மற்றும் இளவரசி பெயர்கள்?
வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும் இளவரசி பெயர்கள் இல்லை என தெரிவிக்கபப்டுகின்றமை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிகிகின்றன.
தமிழக சட்டமனற் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
நாளையதினம் தமிழக மக்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் சசிகலா மற்றும அவரது சகோதரர் மனைவி இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. போயஸ் கார்டன் வேதா இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா சசிகலா ஆகியோருக்கு ஓட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லாமல் உள்ளது அமமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு சசிகலா பெயரை நீக்கியுள்ளதாக அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் புகாரளித்துள்ளார்.
இதேவேளை போயஸ் கார்டன் மற்றும் தற்போது சசிகலா வசிக்கும் அபியுல்லா சாலை இல்லம் ஆகியன ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.