சுற்றுலா சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; தீவிரமடையும் தேடுதல்
சுற்றுலாவிற்கு வந்து பெந்தோட்டை கடலில் நீராடிய இரண்டு இளைஞர்களில் ஒருவர் நேற்று (26) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பேருவளை, பிங்கேன மற்றும் கலவில பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

மீட்புபணி
பெந்தோட்டை சிறுவர் பூங்காவிற்குப் பின்னால் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குள்ள குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து கலவிலவைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மீட்டு பெந்தோட்டை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற இளைஞரைக் கண்டுபிடிக்க பிரதேசவாசிகள், கடலோர காவல்படை அதிகாரிகளால் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.