04 வயது சிறுமிக்கு நடுவீதியில் நேர்ந்த துயரம் ; பரிதாபமாக பலியான முதியவர்
பொலன்னறுவை, சேவாகம பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் 04 வயது சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோமாவதிய வீதியின் சேவாகம பகுதியில் நேற்று (26) இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பளுகஸ்தமன, பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 80 வயதுடைய முதியவர் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவரும் சிறுமியும் உடனடியாகப் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலன்னறுவை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.