பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டை பாதித்து வரும் வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறு பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு சுசாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்தப் அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.
அதிக வெப்பநிலை
அதிக வெப்பநிலை உள்ள நாட்களில் மாணவர்கள் வெளிப்புற , மற்றும் மைதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.
பாடசாலை இடைவேளையின் போது வெளியில் அதிக சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதையும், விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.
சோர்வைப் போக்க அதிக தண்ணீர் குடிப்பதும், இரண்டு சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்வதும் சிறந்தது.
மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, மதிய நேரத்தில் அதிக வெப்பநிலையின் போது மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.