அமைச்சர் மகன் பதிவு குறித்து விசாரணை செய்யவேண்டும்- ஊடகவியலாளர் சமுடித்த கோரிக்கை
தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும்தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது தனிப்பட்டபாதுகாப்பு குறித்தும் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் தான் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமைச்சர் சரத்வீரசேகரவின் மகனின் முகநூல் பதிவை பொலிஸார் அலட்சியம் செய்ய முடியாது என தெரிவித்துள்ள சமுடித்த சமரவிக்கிரம, ஊடக அறிக்கைகள் முகநூல்பதிவுகளிற்காக பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்தாக தெரிவித்த அவர், சரத்வீரசேகரவின் மகனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனது வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்களி;ன் 22 வீடியோ பதிவுகளை பொலிஸாரிடம் வழங்கியுள்தாக தெரிவித்த அவர், பொலிஸார் குற்றவாளிகளை கைதுசெய்யாவிட்டால் இதுவும் இன்னுமொரு சம்பவமாக மாறிவிடும் எனவும் கூறினார். எனவே இது குறித்து சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரளைதேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமைகுறித்து தெரிவித்துள்ள அவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின்தலையீட்டினால் விசாரணைகளின் போக்கு முற்றாக மாறியதாகவும், கர்தினால் தலையிடாவிட்டால் சில அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள் எனவும் கூறினார்.
அதேசமயம் சிலர் தங்கள் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஒரு நாடகம் என்கின்றனர் இதனால் கை அடையாளங்களை ஆராயுமாறு காவல்துறையினரை கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் மீது கற்கனை மலக்கழிவுகளை எறிந்தவர்களை மேலும் இருவர் உள்ளனர்- ஒருவர் எங்கள் வீட்டின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்தார் மற்றைய நபர் வானிற்குள் இருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என என்னால் தெரிவிக்க முடியாது என தெரிவித்த ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரம, தனது ஊடக நடவடிக்கைகள் காரணமாக பலர் சீற்றமடைந்திருக்க கூடும் எனவும் மேலும் தெரிவித்தார்.

