நாட்டின் பெண் வாக்காளர்களிடம் அமைச்சர் மனுஷ விடுத்த விசேட வேண்டுகோள்!
இந்த நாட்டில் பெண்களுடன் புகைப்படம் எடுப்பதன் மூலமும் அவர்களுடன் சிரித்து அரட்டை அடிப்பதன் மூலமும் அவர்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம் என சில அரசியல்வாதிகள் நம்புவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வாறான சைகை அரசியல் தந்திரோபாயங்களுக்கு பெண்கள் ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நாட்டில் உள்ள பெண்கள் மிகவும் புத்திசாலிகள் என்றும், அத்தகைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கேகாலை சுதந்திர அவென்யூவில் இன்றையதினம் (23-02-2024) நடைபெற்ற “ஜெயகமு ஸ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.