அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் முகநூலில் அவரே தகவல் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்தது, எனது பல ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் எடுக்கப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

எனவே, கடந்த வாரம் (2021-08-20) முதல் என்னுடன் பணியாற்றிய அனைத்து அரசு அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாடு எதிர்கொள்ளும் பேரழிவுகரமான சூழ்நிலையில் உங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தனிமைப்படுத்தப்பட வேண்டியது நாம் அனைவரின் பொறுப்பும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.