வாகரையில் சுழற்றி அடித்த மினி சூறாவளி; 14 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (05) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் கே. அமலினி தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 211 பி கிராம சேவகர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகள் மூன்றும் பகுதியளவில் பதினொரு வீடுகளுமாக பதினான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பாலர் பாடசாலையின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கபட்ட வீடுகளின் சேத விபரங்கள் பிரதேச செலக அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.ஹைதர் அலி மற்றும் எஸ்.எம்.தாஹிர் ஆகியோர் பிரதேத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட உதவிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.