இலங்கையில் பல இலட்சக்கணக்கான காலணிகள் திருட்டு! சிக்கிய திருடன்
மாதம்பே பழைய நகரில் காலணி தொழிற்சாலை ஒன்றிலிருந்து 954,750 ரூபா பெறுமதியான 355 ஜோடி காலணிகளை கொள்ளையடித்து சென்ற நபரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாதம்பே பழைய நகரைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இந்த திருட்டுச் சம்பவம் மாதம்பே பழைய நகரில் உள்ள பெண்களுக்கான காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலையின் ஜன்னலை சந்தேகநபர் இரவில் உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த காலணிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாதம்பை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், அந்தப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதணிகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.