தாமரைக் கோபுர நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் மில்லியன் கணக்கில் வருமானம்
தாமரைக் கோபுர நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் முதல் நாளில் 2 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாமரைக் கோபுர செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருகை தந்த எண்ணிக்கை
முதற்கட்டமாகவே தற்போதைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய முதல் நாளில் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு 2,662 பேர் வருகை தந்துள்ளனர்.
இரண்டாம் கட்ட செயற்பாடுகளை அடுத்து 2 மாதங்களுக்குள்ளும், இறுதி கட்ட செயற்பாடுகளை அடுத்த வருடம் மார்ச் மாத மளவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்று கூறியுள்ளார்.