உலகிற்கு பேரிடியை இறக்கிய ட்ரம்ப்; ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும்....
இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத் தேவைகளும் தயார்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்களும் மற்ற அனைத்துத் தேவைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த இடைவெளியில் நாங்களும் எங்களை வலுப்படுத்திக்கொண்டோம், தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்கு முழுத் தயார் நிலையில் உள்ளது.
நான் உத்தரவிட்டால் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.