வடக்கு – கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் ; சுமந்திரன் வலியுறுத்து
இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்தி வந்திருந்த நிலையில் வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும் எனவும் அதற்கு எதிரான போராட்டம் 29 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார்.
எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம். மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் அந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது.
கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.
மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.