இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான்
இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று விண்கல மழை பொழியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.