பதிவாளர் நாயகம் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !
பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் நகல்களில் சரிபார்ப்பு காலம் இல்லை என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம் 06 மாதங்களுக்கு முன்னர் செல்லுபடியாகும் எனச் சான்றளிக்கப்படுவதற்கான நகல் பிரதிகளுக்கான கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஆவணங்களுக்கு சரிபார்ப்பு காலம் இல்லை என்று கூறிய பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களங்கள், ஆட்கள் பதிவு திணைக்களங்களுக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் நகல்களில் திருத்தங்களைச் செய்ய மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.