புதிய பிரதமர் ரணிலுக்கு இந்தியாவிடமிருந்து சென்ற செய்தி!
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவி உருவாகியுள்ள நிலையில் இதற்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலக கோரி நாட்டு மக்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக நாடு தழுவிய ரீதியில் அமைதியான முறையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (10-05-2022) மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில் இடைக்கால பிரதமராக யார் வருவார் என பல கேள்விகள் எழுந்தன.
இவ்வேளையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை கௌரவ பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
High Commission of India hopes for political stability and looks forward to working with the Government of Sri Lanka formed in accordance with democratic processes pursuant to the swearing in of Hon'ble @RW_UNP as the Prime Minister of #SriLanka. (1/2)
— India in Sri Lanka (@IndiainSL) May 12, 2022