வக்ர நிவர்த்தி அடையும் புதன் ; இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 13 துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நல்ல பலன்களில் இருந்த தடைகள் நீங்கும்.
துலாம் ராசியில் நேர்கதியில் பயணத்தை தொடங்கும் புதனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்த ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது புதன் துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் நல்ல பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள்
மேஷம்:மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் இருந்த பிரச்சனைகள் குறையும். வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினால் இலக்கை அடைய முடியும். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ குணங்கள் பாராட்டப்படும். சிலருக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
கன்னி: கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் இரண்டாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை இந்த ராசிக்காரர்கள் வேலையில் தடைகளை சந்தித்து வந்தால், அது நீங்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.
துலாம்:துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் குறையும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்: கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் பொற்காலமாக இருக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.