இலங்கையில் பல்பொருள் அங்காடிக்கு சென்றவர் மீது ஈவிரக்கமின்றி தாக்குதல்!(Video)
இலங்கைப் பல்பொருள் அங்காடியொன்றில் திருட முயன்றதாக தெரிவித்து அங்காடி ஊழியர்கள் மோசமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வத்தளையில் உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்றுள்ளது காணொளியில் நபர் ஒருவரை ஊழியர்கள் சூழ்ந்து நின்று தாக்குவதை வீடியோ காண்பிக்கின்றது.
விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்பொருள் அங்காடி,
இந்த சம்பவம் 19ம் திகதி இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. திருடமுயன்றவர் தப்பியோ முயன்றபோது வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அவர் தப்பியோடாமல் தடுத்தனர்.
Keells says it is to take action on employees at its Wattala supermarket who failed to follow the operating procedure when dealing with a shoplifter recently (Video courtesy TikTok)https://t.co/uZXimfd8kz#Srilanka #lka #Keells #shoflifter @Keells_SL pic.twitter.com/wZNPQKfGDk
— Easwaran Rutnam (@easwaranrutnam) April 22, 2023
அதன் பின்னர் பதற்றமான நிலை உருவானது என தெரிவித்துள்ள நிறுவனம் , சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் வரும் வரை குற்றத்தில் ஈடுபட முயன்றவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதே உரிய நடைமுறை.
ஆனால் இந்த நடைமுறை அங்காடியில் பின்பற்றப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது.