கிளிநொச்சியில் கூலிப்படை வைத்து கடத்தப்பட்ட வாகனம் மீட்பு! வெளியான பின்னணி
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட கயஸ் வாகனத்தை சிறைச்சாலையில் உள்ள ஒருவர் கூலிக்கு ஆள் வைத்து கடத்திய நிலையில் வாகன உரிமையாளரால் கல்வயலில் ஓர் வீட்டில் வைத்து 9 நாள்களுக்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தயாளன் தயா என நபர் முகநூலில் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல் நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும் இடையில் இருக்கும் சேவீஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி ஓர் வானை சேவீஸ் செய்வதறகாக கொடுத்தவர் தனது இரண்டாவது வாகனம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்காக சென்றார்.
இதனால் நேரம் தாமதமானதால் சேவீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார். மறுநாள் சென்று வாகனத்தை எடுக்க எண்ணியவரிற்கு மாறுநாளான 30 ஆம் திகதி சேவீஸ் நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை யாரோ இருவர் வந்து எடுத்துச் சென்று விட்டனர் என பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர் நேரில் சென்று என்னை தொடர்பு கொண்டு கேட்காது யாருடம் எவ்வாறு ஒப்படைப்பீர்கள் என சேவீஸ் நிலையத்தில் வினாவியதோடு அங்கே இருந்த சீ.சீ.ரிவி கமராவை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது வாகனத்தை எடுத்துச சென்றவர் சேவீஸ் நிலையத்தினருடன் தாம் பொலிசார் எனக் கூறியே வாகனத்தை எடுத்துச் சென்றதாக சேவீஸ் நிலையத்தில் தெரிவித்திருந்தனர்.
இவை தொடர்பில் வாகன உரிமையாளர் மாங்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டினை பெயரில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேறகோண்டு வந்தனர்.
இருந்தபோதும் உரிமையாளரும் பல முயற்சிகளை மேற்கொண்டு 9 நாட்களின் பின்பு சாவகச்சேரி கல்வயலில் உள்ள வேதவனப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் கயஸ் வாகன உரிமையாளர் மீட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
இதேநேரம் வாகன உரிமையாளரின் பகைவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரே ஆள் வைத்து வாகனத்தை கடத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.