முகக்கவசம் அணியுமாறு கூறிய எரிபொருள் நிலைய ஊழியரை மூர்க்கமாக தாக்கிய நபர்கள்
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை முகக்க கவசம் அணியுமாறு கூறிய ஊழியரை கடுமையா தாக்கிய சம்பவம் ஒன்று மீகொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமபவம் தொடர்பில் தெரியவருகையில்,
முகக்கவசம் அணியாது எரிபொருள் நிலையத்திற்கு சென்ற ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் எரிபொருள நிரம்புமாறு கோரியுள்ளார்.
இதன்போது, முகக்கவசம் அணியுமாறு எரிபொருள் நிலைய ஊழியர் கூறியதால் கோபப்பட்ட நபர், அங்கிருந்து சென்று மற்றுமொரு நபரை அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை இருவரும் சேர்ந்து கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இந்நிலையில் ஊழியரை அவர்கள் தாக்கியமை அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதன்போது , அவர்களில் ஒருவர் ஊழியரை தரையில் அடித்து தாக்கியதுடன், அதனை தடுத்த மற்றுமொரு ஊழியர் மீது அவர்கள் தாக்குதலை மேற்கொண்டமை சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, 24 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த ஊழியர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.