பாதசாரிகள் கடவையில் அட்டகாசம்; பாதசாரியை தாக்கிய சாரதி கஞ்சா பாவனையாளர் என மருத்துவ அறிக்கையில் உறுதி

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Drugs
By Sahana Nov 22, 2026 06:01 PM GMT
Report

கொழும்பு, பொரளை – கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்து விதிகளை மீறி, பாதசாரிகள் கடவையை மறித்து, பாதசாரி ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சாரதி கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர் என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

கடந்த 20ஆம் திகதி பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் பொரளை கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகிலுள்ள பாதசாரிகள் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற தம்பதியினர், குறித்த பாதசாரிகள் கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையிலும், இராஜகிரிய திசையிலிருந்து கனத்தை சுற்றுவட்டத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று பாதசாரிகள் கடவையை மறித்து நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதசாரிகள் கடவையில் அட்டகாசம்; பாதசாரியை தாக்கிய சாரதி கஞ்சா பாவனையாளர் என மருத்துவ அறிக்கையில் உறுதி | Medical Report Confirms Driver Pedestrian Cannabis

இதன்போது காரின் சாரதி தொடர்ச்சியாக ஒலிப்பானை ஒலிக்கச் செய்ததுடன், தம்பதியினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதசாரிகளில் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பொரளைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் என்பது மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவரைத் தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கைத் தொழில்முனைவோரை உலகளவில் இணைக்கும் புதிய முயற்சி! ஜப்பானில் GLEC சர்வதேச மாநாடு

இலங்கைத் தொழில்முனைவோரை உலகளவில் இணைக்கும் புதிய முயற்சி! ஜப்பானில் GLEC சர்வதேச மாநாடு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US