கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம்
கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள்,

நடைபெறும் இடம்: கொழும்பு கோட்டை முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் வளாகம்
நேரம்: நாளை (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல்
சேவைகள்
இரத்தப் பரிசோதனைகள், பல் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் உட்பட மொத்தம் 10 வகையான சிகிச்சை மருத்துவ பிரிவுகள் இங்கு செயல்படவுள்ளன.
இந்த விசேட வேலைத்திட்டமானது கொழும்பு கோட்டை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.