மே – 03; இலங்கை அரசியலில் பெரும் புயலாக மாறுமா? அனுர அடிக்கவுள்ள அபாயமணி!
எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இது குறித்து அநுர முகநூல் பக்கத்தில்,‘சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும். ‘ என தனது அதிகாரப்பூர்வ பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது முகநூல் பதிவும் பெரும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அரசாங்க ஊழல்களையே அநுர உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவாரென எதிபார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.