வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பாய்கள், படுக்கை விரிப்புகள் பறிமுதல்
மன்னார், அடம்பன் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் அடம்பன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
1,400 பாய்கள் கொண்ட 28 பொதிகளும் , 1,400 படுக்கை விரிப்புகள் கொண்ட 14 பொதிகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து சுவர்ணபுரி கிராமத்தில் உள்ள கைவிடப்பட்ட ஒரு வீட்டில் நேற்று (01) பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட குறித்த பொருட்கள் தேர்தலை இலக்கு வைத்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.