மட்டக்களப்பு பிரதான சாலையில் விபத்துக்குள்ளான புலி
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிகவும் அருகிவரும் நிலையில் உள்ள சருகுபுலி யொன்று இன்று காலை விபத்தில் உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி ஊரணியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.இதன்போது மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள நிலையில் குறித்த புலி உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சருகு புலியானது சதுப்பு நிலப்பகுதியில் அதிகளவில் வாழ்ந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக குறித்த இனம் அருகிவரும் நிலையில் இவ்வாறான விபத்துகளில் இறக்கும் நிலையும் காணப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக பிள்ளையாரடியினை அண்டியுள்ள பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களில் வாழும் சருகுபுலிகள் விபத்துகள் மூலம் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.