நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 2,37,649 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
கடந்த வருடம் முழுவதும் சுமார் 1,22,000 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க கூறினார்.
இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.