செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி ; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
சந்திரனின் நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடிவும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மொத்தத்தில் ஜனவரி இறுதி முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் வெற்றிகளை குவிப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு நிறைய லாபத்தை ஈட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.