20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி மாப்பிள்ளை!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 43 வயது நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரான பிரோஸ் நியாஸ் ஷேக் , மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பண்களை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம்
இவர் 2015 முதல் 20 இற்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த முறைப்பாடின் அடிப்படையில் பிரோஸ் நியாஸ் ஷேக்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிசில் முறைப்பாடு செய்த பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளத்தில் பெண்ணிடம் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து 6.5 லட்சம் மதிப்புள்ள பணம், மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க சில பொருட்களை அவர் திருடி சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மடிக்கணினி, தொலைபேசிகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டனர்.
அதேவேளை 2015 முதல் விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து அவர்களின் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.